விடாமுயற்சியுடன் போராடிய பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்.. உதவி ஆட்சியராக தேர்வாகி அசத்தல்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரள மாநிலத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Also Read | உலகின் 800 வது கோடி குழந்தை.. பிறந்தது எங்கே?.. பெயர் என்ன?? இணையத்தில் வைரலாகும் தகவல்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கோகுல். பார்வை மாற்றுத்திறனாளியான இவர் இளங்கலை ஆங்கிலம் முடித்திருக்கிறார். படிப்பில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் முதுகலை முடித்த நிலையில் தற்போது முனைவர் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, குடிமைப்பணி தேர்வுகளுக்கும் கோகுல் தயாராகி வந்திருக்கிறார்.
மக்களுக்கு தொண்டு செய்வதை விரும்பி செய்துவரும் கோகுல் அதற்காகவே குடிமை பணி தேர்வுகளை எழுத தயாராகியுள்ளார். முன்னதாக பேராசிரியராக ஆக வேண்டும் என விருப்பப்பட்டிருக்கிறார் கோகுல். ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் இவருடைய முடிவை மாற்றியமைத்திருக்கிறது. எப்போதும் மக்களுக்கு உதவி செய்ய நினைக்கும் கோகுல், வெள்ள சூழ்நிலையில் போன்மூலமாக நண்பர்களை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளார்.
இவருடைய சேவையை நினைவுகூரும் கோகுல் அதற்கு ஐஏஎஸ் அதிகாரி வாசுகி அவர்களை முன்னோடியாக தான் எடுத்துக்கொண்டதே காரணம் என்கிறார். அப்போதுதான் குடிமை பணி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற வேட்கையும் அவருக்குள் எழுந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு முதல்முறை தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு வேறு பிரிவில் பணி கிடைத்திருக்கிறது. ஆனால், தொடர்ந்து முயற்சித்து வந்த கோகுல் 2021 ஆம் ஆண்டு மீண்டும் குடிமைப்பணி தேர்வை எழுதி இருக்கிறார். இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தின் உதவி ஆட்சியராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அவர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கீழ் அவரிடம் பயிற்சி பெறும் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பார்வை திறன் குறைபாடு உடைய ஐஏஎஸ் அதிகாரி கோகுலை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து அவர் பேசுகையில், தன்னால் முடிந்த பணிகளை திறம்பட செய்து வருவதாகவும் விடா முயற்சியுடன் போராடினால் வானமே எல்லை என்றும் நெகிழ்ச்சியடையுன் தெரிவித்திருக்கிறார்.
Also Read | ஆட்டோவில் கிடந்த Airpods.. கரெக்ட்டான ஆள் கிட்ட சேர்க்க ஆட்டோ ஓட்டுநர் Use செஞ்ச டெக்னிக்!!..