‘அம்மாவையும், அவரின் கள்ளக் காதலரையும்’ கையும் களவுமாக, அறையில் வைத்து பூட்டிய 15 வயது மகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 06, 2019 11:12 AM

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக இருந்துவந்துள்ளார். இவரது 68 வயதான கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வர, இந்த தம்பதியரின் 15 வயது மகள் 10-ஆம் வகுப்பு பயின்றுவந்துள்ளார்.

bizarre reason by mother after her affair caught to daughter

ஆனால் ஆசிரியை, தன்னுடைய தம்பியின் நண்பரான 29 வயது வாலிபருடன் அடிக்கடி பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் கள்ளக் காதலாக மாற, இருவரும் மகள் வீட்டில் இருக்கும்போதே இன்னொரு அறையில்  தங்கி இருந்துள்ளனர். இதனை கண்டுபிடித்த 15 வயது மகள், தன் அம்மாவையும் அவரது கள்ளக்காதலனையும் அந்த அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

பிறகு, தன் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். உடனே அங்கு விரைந்த உறவினர்கள், ஆசிரியையுடன் தொடர்பு வைத்திருந்த அந்த வாலிபரை அடித்து உதைத்து மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். ஆனால் அங்கு வந்த ஆசிரியை, தான் அந்த வாலிபருடன்தான் வாழவுள்ளதாகவும், வீட்டிற்கு சென்றால் கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினார்.

அப்போதுதான் அந்த வாலிபருடன் ஏற்பட்ட தொடர்புக்கு, ஆசிரியை விளக்கம் கொடுத்தார். அதன்படி, தன் அம்மாவுக்கும் தன் கணவருக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பு காரணமாகவே, தன் கணவருக்கு தன்னை தன் அம்மா மணம் முடித்து வைத்ததாகவும், அவர்களின் உறவு பிடிக்காததால்தான், இந்த வாலிபருடன் பழகியதாகவும், அதற்குள் தனது 15 வயது மகள் தங்கள் இருவரையும் அறைக்குள் இருக்கும்போது வெளியில் பூட்டிவிட்டதாகவும் ஆசிரியை கூறியுள்ளார். 

அதன் பின், உறவினர்கள் யாரும் புகார் அளிக்க முன்வராததால், வாலிபர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு போலீஸாரால் அனுப்பப் பட்டார். மேலும் ஆசிரியையின் பாதுகாப்பு கருதி, நெல்லை மகளிர் காப்பகத்துக்கு அனுப்பப் பட்டார்.

Tags : #NELLAI #WOMAN #AFFAIR #DAUGHTER #POLICE