ஆட்டோவில் கிடந்த AIRPODS.. கரெக்ட்டான ஆள் கிட்ட சேர்க்க ஆட்டோ ஓட்டுநர் USE செஞ்ச டெக்னிக்!!..
முகப்பு > செய்திகள் > இந்தியாஆட்டோவில் பயணம் மேற்கொண்ட நபர் ஒருவர் அவரது ஆப்பிள் ஏர்போடை தவற விட்ட நிலையில், அதன் பின்னர் ஆட்டோ ஓட்டுநர் செய்த விஷயம், தற்போது இணையவாசிகளின் லைக்குகளை அள்ளி வருகிறது.
![bengaluru auto driver tracks down woman to return her airpods bengaluru auto driver tracks down woman to return her airpods](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/bengaluru-auto-driver-tracks-down-woman-to-return-her-airpods.jpg)
பொதுவாக, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களை நபர் ஒருவர் பயன்படுத்தும் போது சில நேரம் அவர்களின் உடைமைகளை அதில் தவற விடுவது தொடர்பான செய்திகளை நாம் நிறைய கடந்து வந்திருப்போம்.
அப்படி இருக்கும் வேளையில், சில நேரங்களில் சம்மந்தப்பட்ட ஓட்டுநர்களே பயணிகளிடம் பத்திரமாக ஒப்படைப்பார். இல்லையெனில் போலீசார் உதவியுடனும் அந்த பொருட்கள் பத்திரமாக பயணிகள் கையில் போய் சேருவதும் வழக்கமான ஒன்று தான்.
அப்படி ஒரு சூழலில், பெங்களூர் பகுதியில் பணியாற்றி வரும் சிடிகா என்ற பெண், சமீபத்தில் தான் பணியாற்றும் இடத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், ஆட்டோவில் இருந்த போது சிடிகா தனது ஆப்பிள் ஏர்போடை தவற விட்டதாகவும் தெரிகிறது. மறுபக்கம், சிறிது நேரத்திற்கு பிறகு ஏர்போடு ஒன்று ஆட்டோவில் இருப்பதையும் அந்த ஆட்டோ ஓட்டுநர் கவனித்துள்ளார்.
மேலும் இதனை உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்றும் ஓட்டுநர் முடிவு செய்துள்ள நிலையில், அது யாருடையது என்பதை அறிந்து கொள்ளும் முனைப்பிலும் முதலில் அந்த ஆட்டோ ஓட்டுனர் இறங்கி உள்ளார். தனது போனில் அந்த ஏர்போடை Pair செய்த ஆட்டோ ஓட்டுநர், அதில் வரும் பெயரை குறித்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து அந்த பெயரில் தனது போனில் யாராவது டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்துள்ளார்களா என்பதையும் பார்த்துள்ளார். அப்போது அந்த பெண் குறித்த விவரம் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரை எங்கே டிராப் செய்தோம் என்பதை நினைவு கூர்ந்த ஆட்டோ ஓட்டுநர், அந்த அலுவலகம் சென்று அங்குள்ள காவலாளியிடம் விவரத்தையும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பின்னர் தனது ஏர்போடை பெற்றுக் கொண்ட சிடிகா, இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் தளத்தில் கருத்தினை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநரின் செயல் தற்போது பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)