'தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஓட்டல்'... '15,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 10, 2019 01:48 PM

தயிருக்கு ஜி.எஸ்.டி. மற்றும் பார்சல் தொகை வசூலித்த உணவகத்திற்கு நெல்லை நீதிமன்றம் 15,000  ரூபாய் அபராதம்  விதித்துள்ளது.

nellai court fined rs 15,000 to hotel get gst for curd pocket

நெல்லை மாவட்டம் தாழையத்து அருகே உள்ள தாராபுரத்தை சேர்ந்தவர் மகாராஜா. இவர், பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில், 40 ரூபாய்க்கு தயிர் வாங்கியுள்ளார். இதற்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி.யாக 2 ரூபாய், பார்சல் செய்ய 2 ரூபாய் என, 4 ரூபாய் சேர்த்து 44 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. தயிர், பச்சை பால், பச்சை மாமிசம், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் ஜி.எஸ்.டி.க்குள் வராது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்ததால் அதிர்ச்சியடைந்த மகாராஜா, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றமத்தில், வணிகவரித் துறை அதிகாரியும் விசாரிக்கப்பட்டார். தயிருக்கு வரி கிடையாது. பார்சல் கவருக்கு கட்டணம் வாங்க கூடாது என உறுதியானது. இதையடுத்து நுகர்வோரின் மன உளைச்சலுக்கு 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவுக்கு 5,000 ரூபாய், ஜி.எஸ்.டி., கவர் ஆகியவற்றுக்கு வசூலித்த நான்கு ரூபாயையும் சேர்த்து, 15 ஆயிரத்து, நான்கு ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் 6 சதவிகித வட்டியும் வழங்க வேண்டும் என்று  நீதிபதி தேவதாஸ் தீர்ப்பளித்தார்.

Tags : #GST #COURT #CONSUMER #NELLAI