எப்பவும் ஆன்லைன் கேம்.. கடைசி'ல இளைஞருக்கு நேர்ந்த நிலை.. பதைபதைப்பு சம்பவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஆன்லைன் கேம்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, கொரோனா தொற்றிற்கு பிறகு, வீட்டிலேயே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முடங்கிக் கிடந்ததால், செல்போன் பயன்பாடும் இவர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது.
அப்படி தொடர்ந்து, செல்போனில் கேம் ஆடி, பின்னர் சிகிச்சைக்கு வேண்டி, இளைஞர் ஒருவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் கேமில் அதிக நேரம்
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நீண்ட நாட்களாகவே ஆன்லைன் கேம்களை விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், எப்போதும் கேம்கள் ஆடி ஆடி, அதற்கு அடிமையாகி விட்ட அந்த இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன் நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர்
அங்கு வந்த அந்த இளைஞர், பாதி மயக்க நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, அவர் கேம் விளையாடுவது போல, துப்பாக்கி எடுத்து சுடுவது போலவும், தன்னுடைய கைகளை அசைத்து சைகையை செய்து கொண்டிருந்தார். அவரின் இந்த மோசமான நிலையை கண்டு, அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பிறகு, அந்த இளைஞரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து, சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் வேளையில், அதிகாலை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து அந்த இளைஞர் தப்பித்துச் சென்றதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறிவுறுத்தும் வல்லுநர்கள்
தொடர்ந்து, இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமில் அடிமையாகி, போன் இல்லாமல் கூட கேம் ஆடுவது போல சைகை செய்த இளைஞரால், பலரும் பதைபதைப்பில் உள்ளனர்.
இது போன்ற சம்பவங்களை கண்டாவது, மற்ற பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
"ரெய்னா'வ எடுக்கல'ன்னு சொல்லி என்ன தான் திட்டுனாங்க.." பிரபல சிஎஸ்கே வீரர் பகிர்ந்த விஷயம்..

மற்ற செய்திகள்
