"மாப்ள செவ்வாய் கிரகத்துக்கு எந்த வழியா போகனும்..." குடிகாரர்கள் சென்ற வழியில் மொட்டைக் கிணறு... சொர்க்கத்துக்கே வழிகாட்டிய எமன்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 24, 2020 02:46 PM

கருமந்துறையில் குடித்து விட்டு ஒருவருக்கொருவர் தள்ளி விட்டு விளையாடியபடி சென்ற 2 விவசாயிகள் மொட்டை கிணற்றில் தவறி விழுந்து பலியானார்கள்.

Drunken farmers fall into the well and die-Relatives are sad

சேலம் மாவட்டம், கருமந்துறை அருகே உள்ள பெரிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த மாரி, வெள்ளையன் என்ற 2 விவசாயிகள் நேற்று முன்தினம் தோட்டத்தில் மது அருந்தியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி விளையாடிக்கொண்டு தோட்டத்தின் வழியாக சென்றுள்ளனர்.

இதில் அவர்கள் இருவரும் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தடுப்புச்சுவர் இல்லாத மொட்டை கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதனிடையே நண்பர்கள் இருவரையும் காணவில்லை என்று உறவினர்கள் தேடிய போது, அவர்கள் இருவரும் கிணற்றில் பிணமாக மிதந்தது நேற்று தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : #FORMERS #DRUNK #WELL #FARMERS DIE