கை, கால்கள் ‘கட்டப்பட்ட’ நிலையில் ‘கிணற்றில்’ மிதந்த சடலம்... ‘காணாமல்போன’ சிறுவனைத் தேடிய ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 09, 2020 11:50 AM

செங்கல்பட்டு அருகே பள்ளிச் சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chengalpattu School Student Brutally Murdered Body Found In Well

செங்கல்பட்டை அடுத்த வெண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் - உஷா தம்பதியின் மகன் புருஷோத்தமன் (14). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி புருஷோத்தமனைக் காணவில்லை என அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனைத் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர்.

இதற்கிடையே வெண்பாக்கம் சாரதாம்பாள் நகரில் உள்ள ஒரு தனியார் விவசாய கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டுள்ளனர். பின்னர் போலீஸ் விசாரணையில், அந்த சடலம் சிறுவனுடையதுதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #SCHOOLSTUDENT #BOY #FAMILY #WELL #CHENGALPATTU #CHENNAI