ஆன்லைன் வகுப்புக்காக மகளிடம் செல்போனை கொடுத்த தந்தை... 'என்ன இது... நம்பவே முடியல!'.. அப்பாவுக்கு ஆப்பு வைத்த மகள்!.. தரமான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைன் வகுப்பிற்காக தந்தையின் செல்போனை பயன்படுத்திய பள்ளி மாணவி, தனது தந்தையை பற்றி பல திடுக்கிடும் உண்மைகளை கண்டுபிடித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, லாக்டவுன் காரணமாக வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வகுப்பின் மூலம் பயின்று வந்துள்ளார்.
12 ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, ஆன்லைன் வகுப்பிற்காக தனது தந்தையின் செல்போனை பயன்படுத்தியுள்ளார். அப்போது, அந்த மாணவியின் தந்தையும், வேறொரு பெண்ணும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்துள்ளார்.
அவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். மேலும், அதை தாயிடம் காண்பித்த போது, அந்த வீடியோவில் இருப்பவர் சொந்தகார பெண் என்பது தெரியவந்தது.
இதனை அறிந்து, கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய மாணவியின் தாய், காவல் நிலையத்திலும், மாதர் சங்கத்திலும் புகார் அளித்தார்.
வழக்கை பதிவு செய்த போலீசார், "இந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் சம்மதத்துடன் தான், இந்த வீடியோ எடுக்கப்பட்டதா என்றும், இது வேறு யாருடனாவது பகிரப்பட்டுள்ளதா" போன்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
