'கணவன்' இல்லாத நேரத்தில் வந்து சென்ற 'கயவன்'... தட்டி கேட்ட 'மாமியாரை' சொர்க்கத்துக்கு அனுப்பிய 'மருமகள்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 10, 2020 05:43 PM

கள்ளத் தொடர்பை தட்டிக் கேட்டதால் மாமியாரை பாம்பை கடிக்க வைத்து கொன்றதாக மருமகள் மற்றும் அவரது கள்ளக் காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

daughter-in-law who killed her mother-in-law

ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவர் ராணுவத்தில் பணியாற்ற, மனைவி தனது மாமியார் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். மருமகளுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த நபரும் மருமகளும் போனில் பேசிக்கொண்டிருப்பதை மாமியார் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மருமகள் தனது மாமியாரை தீர்த்துக்கட்ட அவரின் கள்ளக் காதலருடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பாம்பை கடிக்க வைத்து கொன்றால், யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், அதனை நிறைவேற்றியுள்ளனர்.

ஆனால், அக்கம்பக்கத்தினர் மாமியாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூற, போலீசார் விசாரணை நடத்தி மருமகள் மற்றும் அவரின் காதலரை கைது செய்துள்ளனர்.

Tags : #DAUGHTER IN LAW #MOTHER IN LAW #KILLED #WRONG CONNECTION