VIDEO: டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற 'ராணுவ வீரர்'.. நொடியில் நடந்த பயங்கரம்..! பரபரப்பு வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Jan 08, 2020 11:10 AM
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரர், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் சக்திக்கும், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தேனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ராணுவ பணிக்காக சக்தி சென்றுவிட்ட நிலையில், தேனிஷா மதுரையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்த தேனிஷாவிடம் சக்தியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே விடுமுறைக்காக சக்தி மீண்டும் ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தேனிஷா திடீரென தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த விசாரணைக்காக ஆர்டிஓ அலுவலகத்துக்கு சக்தி வந்துள்ளார். மனைவி இறந்த மனவருத்ததில் இருந்த சக்தி, அங்கு உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். கீழே இருந்த உறவினர்கள் அவரை சமாதப்படுத்த முயன்றனர். ஆனாலும் டிரான்ஸ்பார்மரை சக்தி தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனே கீழே தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சக்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
