‘எதிர்காலம் பத்தி நிறைய எதிர்பார்ப்பு இருக்கு ஆனா’.. ‘டைரி எழுதி வைத்துவிட்டு’.. ‘சென்னை இளைஞர் எடுத்த விபரீத முடிவு’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Oct 22, 2019 07:38 PM
பெரம்பலூரில் இளைஞர் ஒருவர் டைரி எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை முகப்பேறு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தான் தங்கியிருந்த அறையில் முரளிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவருடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் போலீஸார் அறையை சோதனை செய்தபோது முரளிதரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த உருக்கமான டைரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த டைரியில் அவர், “எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதை சமாளிக்க போதுமான கல்வியோ, வேலையோ இல்லை. தற்போது செய்யும் வேலையால் இருக்கும் வறுமை தீராது. என்னுடைய குடும்பத்தினர் என்னை மன்னிக்க வேண்டும். மரணத்தின் வலி எப்படி இருக்கும் எனத் தெரியாது. ஆனால் அது எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்” என எழுதி வைத்துள்ளார். உருக்கமாக டைரி எழுதி வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.