ஒட்டுமொத்தமாக '4000 பேரை'.. வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்.. 'கலக்கத்தில்' ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 24, 2019 05:36 PM

உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பெரிய நிறுவனங்கள் பலவும் தங்கள் ஊழியர்களை கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. சில நிறுவனங்கள் திவாலாகும் நிலையிலும், பல நிறுவனங்கள் வேலையில்லா நாட்களையும் அறிவித்து வருகின்றன.

WeWork plans to layoff 4000 employees, details here!

இந்தநிலையில் பிரபல நிறுவனமான வீவொர்க்( We Work) சுமார் 4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு இந்த வீ வொர்க் நிறுவனத்தின் 80 சதவிகித பங்குகளை, ஜப்பானின் சாப்ட் பேங்க் குழுமம் வாங்கியது. இதற்காக  சாஃப்ட் பேங்க் குழுமம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளது. அதிலும் வீ வொர்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆடம் நியூமான் தனது உரிமைகள் மற்றும் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க அவருக்கு மட்டும் சுமார் 1.7 பில்லியன் டாலர்களை சாஃப்ட் பேங்க் குழுமம் செலவு செய்துள்ளது.

இந்த குழுமத்தின் உயர்மட்ட பங்குதாரர்கள் வகுத்துள்ள திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தை மேம்படுத்த, சுமார் 4,000 பேரை வேலையை வீட்டு நீக்கி, வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். குறிப்பாக நிரந்தர ஊழியர்கள் 1000 பேரும் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த செய்திகளுக்கு எந்தவிதமான மறுப்பினையும் வீவொர்க் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.