‘லாக் டவுனால்’... ‘சொந்தக்காரர்கள் இன்றி தவித்த நோயாளி’... 'சென்னை டாக்டரின் கண் கலங்க வைத்த செயல்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக் காரணமாக வயதான நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த நோயாளியின் உறவினர்கள் ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து இன்றி மருத்துவமனைக்கு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அந்த நோயாளிக்கு தேவையான உதவிகளை செய்ய ஆள் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நெப்ராலஜி துறையின் இயக்குனர் மருத்துவர் ஜார்ஜ் ஆப்ரஹாம் நோயாளிகளைப் பார்க்க ரவுண்ட்ஸ் வந்தபோது, யாருமின்றி தவித்து வந்த அந்த நோயாளி நிலையைப் பற்றி கேட்டு அறிந்துள்ளார். இதையடுத்து யாருமில்லாத அந்த நோயாளிக்கு உணவினை ஊட்டிவிட்டு ஆதரவாகப் பேசியுள்ளார். இதனால் அந்த நோயாளி நெகிழ்ந்து போயுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளதுடன், மருத்துவருக்குப் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. இது பெரிய விஷயம் இல்லையென்றாலும், நோயாளிகளுக்கு இதைவிட வேறு மருந்து எதுவும் இல்லை என்று பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
As relatives of a patient couldn't come, a doctor (Georgi Abraham, a senior Nephrologist of Madras Medical Mission) is feeding his patient. This is MEDICINE. #AmidstLockdown pic.twitter.com/W7xE4G31fi
— Arun Janardhanan (@arunjei) April 4, 2020
