‘சென்னை கொரோனா நிலவரம்’... ‘ஏப்ரல் 14-க்கு பின்னர் எப்படி இருக்கும்’... சென்னை மாநகராட்சி கமிஷனர் பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 04, 2020 11:34 PM

கொரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்கால நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி ஆனையர் பிரகாஷ் ஐஏஎஸ் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

Chennai Corporation Commissioner prakash IAS interview on Behindwoods

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில், கடைசியாக வந்த ரயில்களில் தனித்துவிடப்பட்ட வெளிமாநில நபர்களை, சென்னையில் 92 முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு முதல் அனைத்து வசதிகளையும் செய்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பணியாளர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவரையும் மாஸ்க் மற்றும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பணிபுரியுமாறு வலியுறுத்துகிறோம். அடுத்த 90 நாட்கள், ஏப்ரல் 14-க்குப் பின்னர் எப்படி இருக்கும் உள்ளிட்டவற்றை குறித்தும் விரிவாக பேட்டியளித்துள்ளார். விரிவான பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.