‘சென்னை மக்களுக்காக’... ‘அம்மா உணவகம், சூப்பர் மார்க்கெட் முதல்’... ‘அவசர தேவைகளுக்காக மாகராட்சியின்’... ‘அசத்தலான சிறப்பு இணையதளம்’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 04, 2020 09:12 PM

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்களின் அத்தியாவசிய அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஒரு சிறப்பு இணையதளத்தை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

Chennai Corporation introduce special website for Emergency needs

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியவாசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அவசர தேவைக்காக ஊர்களுக்கு செல்பவர்கள், உணவின்றி தவிப்பவர்கள், நிவாரண நிதி கொடுக்க நினைப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி சிறப்பு இணயைதளத்தை உருவாக்கி உள்ளது.

அதன்படி  http://covid19.chennaicorporation.gov.in/c19/ என்ற இந்த இணையதளம் வாயிலாக நிவாரண நிதி வழங்குவது, அவசர பயணங்களுக்கு அனுமதி பெறுவது, அம்மா உணவகம் அமைந்துள்ள இடங்கள், சூப்பர் மார்க்கெட் கடைகள் மற்றும் இன்னபிற அவசர தேவைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தின் தகவல்களும் இந்த ஒரே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வாசிப்பவரக்ள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி பயன்பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.