‘கடையில யாரும் இல்ல'... 'அந்த மனசு தான் சார் கடவுள்'... சலுயூட் போட வைத்த 'கோவை' மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 04, 2020 04:38 PM

யாரும் இல்லாமல் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த பிரட்டுகளை, பொதுமக்கள் அதற்குரிய பணத்தை போட்டு விட்டு எடுத்து செல்லும் சம்பவம் நேர்மைக்கு உதாரணம் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Corona : Coimbatore Bakery ensures social distancing to the fullest

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய காரணங்களுக்கு தவிர்த்து யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவை ரத்தினபுரியில் உள்ள மேம்பாலம் அருகே இருக்கும் இனிப்புக்கடை ஒன்று ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி பொதுமக்களுக்கு ‘பிரட்’ கிடைப்பதற்காக தங்களது கடை முன்பு மேஜை ஒன்றில் ‘பிரட்’ பாக்கெட்டுகளை அடுக்கி வைத்துள்ளனர்.

இதற்கிடையே சமூக விலகலை கடைப்பிடிப்பதன் காரணமாக, பிரட்டை கடையில் விற்பனை செய்ய யாரும் இல்லை. அதற்கு பதில் ‘பிரட்’ வைத்துள்ள பெட்டியின் அருகில் ஒரு அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். அதில், இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ‘பிரட்’ டின் விலை ரூ.30 ஆகும். தேவை யான அளவுக்கு ‘பிரட்’டு களை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போடவும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த கடைக்கு வந்து அங்கு ‘பிரட்’டுகளை எடுத்துக் கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்கிறார்கள். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அதனை பார்த்த நேர்மைக்கு இலக்கணமாக திகழும் கோவை மக்களுக்கும், கடை உரிமையாளரின் நம்பிக்கைக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.