'தமிழகத்தில்' இன்று புதிதாக '74 பேருக்கு' கொரோனா... '485 ஆக' உயர்ந்த மொத்த 'பாதிப்பு'... சுகாதாரத்துறை செயலாளர் 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "தமிழகத்தில் இன்று புதிதாக 74 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 73 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள், ஒருவர் வெளிநாட்டு நபருடன் தொடர்பில் இருந்தவர்" எனத் தெரிவித்துள்ளார்.
