'9 நாட்களில்' கட்டி முடிக்கப்பட்ட 'மருத்துவமனை'... '4 ஆயிரம் படுக்கை வசதிகள்...' 'வெண்டிலேட்டர்கள்...' 'பிரிட்டிஷ்' அரசின் வியக்க வைக்கும் 'சாதனை...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 04, 2020 06:46 PM

பிரிட்டனில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 நாட்களில் மிகப்பெரியை மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது.

A hospital built in 9 days in the UK for corona treatment

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரிட்டனில் கொரோனா பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்காக தனியாக மிகப்பெரிய மருத்தவமனை ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது.

கிழக்கு லண்டனில் இருக்கும் எக்செல் எனப்படும் கண்காட்சி அரங்கம்தான், தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 4000 படுக்கை வசதிகள் கொண்ட அந்த நைட்டிங்கேல் மருத்துவமனை ஒன்பதே நாட்களில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இதில் வென்டிலேட்டர் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையை மின்னல் வேகத்தில் கட்டி முடிக்க பாதுகாப்பு படையினரை அந்நாட்டு அரசு பயன்படுத்திக் கொண்டுள்ளது.