'இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் பலி...' 'நியூயார்க்கை' புரட்டிப்போடும் 'கொரோனா...' 'வரலாற்றில்' பார்த்திராத மிக 'மோசமான' பாதிப்பு...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் 562 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாகாண ஆளுநர் Andrew cuomo அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. அங்கு மொத்தமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 475 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் நியூயார்க் மாகாணம் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 3 ஆயிரத்து 218 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைக்கு இடையே 24 மணி நேரத்தில் 562 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாக மாகாண ஆளுநர் Andrew cuomo தெரிவித்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக நியூஜெர்சி, மிக்சிகன், மாசாசூசெட்ஸ், லூசியானா, ஃபுளோரிடா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.