'அந்த' நாட்டுக்கு போறோம்... எங்கள 'ஞாபகம்' வச்சுக்கங்க... 'பகிரங்கமாக' சொன்ன இளம்வீரர்... ஏன்? என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று வங்காளதேச இளம்வீரர் முஷ்டாபிஷுர் ரஹ்மான் போட்ட ஒரு ட்வீட் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நெருப்பை பற்ற வைத்துள்ளது.

வங்கதேச அணி 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடும் பொருட்டு பாகிஸ்தான் நாட்டிற்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல மாட்டோம் என வங்கதேச வீரர்கள் அடம்பிடிக்க அவர்களை சமாதானம் செய்து, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அவர்களை பாகிஸ்தான் சுற்றுப்பயணம் அனுப்பி வைத்துள்ளது.
Heading to Pakistan. Remember us in your prayers. #PAKvBAN pic.twitter.com/7l85XfFUWM
— Mustafizur Rahman (@Mustafiz90) January 22, 2020
பாதுகாப்பு காரணங்கள் மோசமாக இருப்பதாக வீரர்கள் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர். எனினும் பல கட்டங்களாக துபாயில் இதுகுறித்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பிறகே தங்களது வீரர்களை வங்கதேசம், பாகிஸ்தான் நாட்டிற்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் வங்கதேச வீரர் முஷ்டாபிஷுர் ரஹ்மான் நேற்று கிளம்புவதற்கு முன் சக வீரர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பியை ட்விட்டரில் வெளியிட்டு, ''பாகிஸ்தானுக்கு செல்கிறோம். உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்,'' என பதிவிட்டார். அவரின் இந்த ட்வீட் தற்போது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
