'விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு'... தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 25, 2020 07:47 PM

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 7 மணிக்கு காணொளி மூலம் உரையாற்றினார்.

cm eps address to the people of tamilnadu amid covid19

அவரது உரையின் சாராம்சங்கள் பின்வருமாறு:-

கொரோனாவைத் தடுக்க விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு... என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன்.

21 நாட்கள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தைக் காக்க அரசின் உத்தரவு.

கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

சாதி, மன, இன வேறுபாடுகளைக் கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம்.

அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.

அரிசி, பால் மற்றும் இறைச்சி தடையின்றி கிடைக்கும்.

அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை கடைபிடிப்போம்.

மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும், தமிழக மக்களையும் காக்க உறுதியேற்போம்.

பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும், நம் சமுதாயத்தையும் பாதுகாப்போம்.

 

Tags : #EDAPPADIKPALANISWAMI #CORONAVIRUSINDIA #COVID19