இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 14, 2019 12:12 PM
1. கோவை இருகூர் அருகே ராவுத்தர் பாலம் பகுதியில், ரயில் மோதி 4 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
2. தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்பின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒருமனதாக தீர்ப்பளித்தது.
3. தமிழகத்தில் மேலும் 3 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான பணிகள், விரைவாக நடைப்பெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
4. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் கார் குண்டு வெடித்ததில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
5. ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் 150 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளளன.
6. தமிழகத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
7. அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்காத போதிலும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக இளம்வீரர் ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
8. மண்சரிவால் இரு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை, இன்று மீண்டும் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
9. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) 18 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.3,662 ஆக இருக்கிறது.
10. காசா முனைப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.