இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 25, 2019 09:50 AM

1.சென்னை கிண்டி, அசோக் நகர், மாம்பலம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, கே.கே.நகர், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று  காலை கனமழை பொழிந்தது. சில இடங்களில் மழை பெய்தபடியும் உள்ளது.

Tamil News Important Headlines - Read here for more Sep25

2.சென்னையில் பெட்ரோல், டீசல் விலை, நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.06  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.91 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

3. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பில் கேட்ஸ் இந்த விருதினை மோடிக்கு வழங்கினார். தூய்மை இந்தியா திட்டப்பணிக்காக மோடிக்கு இந்த விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4. தமிழக- கேரள நதிநீர் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கேரளா செல்கிறார். 

5. நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் பெயர்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.

6. இந்தியாவின் தந்தை என மோடியை அழைக்கலாம் என்று அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளது இணையத்தில் விவாதங்களை எழுப்பி வருகிறது.

7. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைப்படத் துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8. பாகிஸ்தானில் உண்டான கடுமையான நிலநடுக்கத்தில் 26 பேர் பலியாகியிருக்கலாம் என்றும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

9. தன் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி தமிழில் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்ததாகக் கூறியுள்ள ப.சிதம்பரம் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

10. இந்திய அளவில் #KEEZHADIதமிழ்CIVILIZATION எனும் ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகிவருகிறது.

Tags : #NEWS #TODAY #HEADLINES