இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 13, 2019 12:15 PM
1. பொள்ளாச்சி அருகே அர்த்தனாரிபாளையத்தில், சிறுமி உட்பட 3 பேரை கொன்ற சாப்பாட்டு ராமன் என்னும் அரிசி ராஜாவை பிடிக்க, கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்படுகிறது.
2. செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியூட்டுள்ளது.
3. கமல்ஹாசனின் நேர்மையை கண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
4. சென்னை கோயம்பேடு பழச்சந்தையில், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், 10 டன் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
6. ஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்கு, மனித தவறே காரணமாக இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
7. ஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணியக்கூடாது என அந்நாட்டு நிறுவனங்கள் கூறியுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
8. வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இளம்சிவப்பு நிற (பிங்க்) பந்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
9. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறையை மாற்ற, அதன் நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதற்கு, லோதா கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
10. டெல்லியில் காற்று மாசின் அளவு தீவிரமடைந்துள்ளநிலையில், காற்றின் வேகம் குறைந்து காணப்படுவதால் மேலும் மோசமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது.