இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 26, 2019 09:20 AM

1. கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மாணவர்கள் நீட்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் மாணவி, மாணவரின் நீட் நுழைவுச்சீட்டு புகைப்படமும், அனுமதி கடித புகைப்படமும் வேறு வேறாக இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்த புகைப்பட வித்தியாசம் பற்றி தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில், சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Tamil News Important Headlines - Read here for more sep26th

2. சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.12 ஆகவும், டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.98 காசுகளாகவும் உள்ளது.

3. இந்தோனேஷியாவில் இன்று(செப்.,26) அதிகாலை 5.16 மணிக்கு, 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4.சென்னையின் திருவான்மியூர், அடையார், பெசன்ட் நகர், மத்தியகைலாஷ், கிண்டி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை இன்று காலை வரை மழை பெய்து வந்தது.

5. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  Dr.C.விஜயபாஸ்கர் சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நலமருத்துவமனையில் உள்ள காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை, நேற்று இரவு 12 மணிக்கு காய்ச்சல் வார்டிற்குச் சென்று நேரடி ஆய்வுகளை மேற்கொண்டார். இதேபோல், நள்ளிரவு 1.10 மணி முதல்

சென்னை, இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் காய்ச்சல் வார்டுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

6. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த உதித் சூர்யா மீது3 பிரிவுகளின் கீழ் தேனி சிபிசிஐடி ஆய்வாளர் சித்ரா வழக்குப்பதிவு செய்திருந்தார். அதன்படி,

7. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து ஷமிகா ரவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறித்தும், சில முடிவுகள் குறித்தும் வெளிப்படையாக ஷமிகா ரவி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

8. பகவத் கீதை பாடம் விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கும் என்றும், கட்டாயப் பாடமாக இருந்ததை விருப்பப் பாடமாக மாற்ற துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

9.நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருங்கிணைப்புக்காகவும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு, நாட்டின் உயரிய விருதாக “சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” என்கிற புதிய விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

10. வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரகளாக விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதியில் நாராயணன் உள்ளிட்ட இருவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #HEADLINES #TODAY #NEWS