இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 10, 2019 10:54 AM
இன்றைய முக்கிய செய்திகள் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளது:

1. சீன அதிபர் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. 60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் தமிழகம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களின் மீதான தேசத்துரோக புகாரை நிராகரிக்க பீகார் காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று சந்தித்தார்.5. தீபாவளிப் பண்டிக்கைகு முதல் நாளான 26 -ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
6. 2018 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் வோல்கா டொக்கர்சுக்கும், 2019 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பீட்டர் ஹண்ட்கேவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7. விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரின் நேற்றைய போட்டியில் தமிழக அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 7 -வது வெற்றியை பதிவு செய்து கால்யிறுதி வாய்ப்பை நெறுங்கியுள்ளது.
8. இடைத்தேர்தல் முடிந்தவுடன் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்த மாதம் 25 -ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
9. போலீசாருக்காக சங்கம் கேட்டு போராடி வந்த சிவக்குமார் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவர் தமிழ்நாடு காவல்துறை காவலர்கள் சங்க மாநில தலைவராக இருந்துள்ளார்.
10. 50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2 -வது கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
