இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 29, 2019 12:23 PM
1. "நடக்கக்கூடாதது நடந்தேறி விட்டது" என்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது.
3 குழந்தை சுஜித் பலியான விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை பின்பற்ற மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
4. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
5.தன் உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத் தந்திருக்கிற பாடத்தை அனைத்துத் தரப்பினரும் இனியாவது கடைபிடிக்க வேண்டும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
6. சுர்ஜித்தை மீட்பதற்காக 4 நாட்களாக உறக்கம், உணவின்றி களைத்துப் போய் உள்ள நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விவேக். மேலும் துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது சுர்ஜித்? என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
7. மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்டது, மனவேதனை தருகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் போது விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
8. சுர்ஜித் இறப்பு சம்பவத்தில், நேற்று இரவு இரவு 10.30 மணியில் இருந்தே துர்நாற்றம் வீசியதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
9. குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாதது வேதனை அளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
10.இந்தியா - சவுதி அரேபியா ஆகிய 2 நாடுகளுமே பாதுகாப்பு விவகாரத்தில் அண்டை நாடுகளால் ஒரே மாதிரியான பிரச்சினையை எதிர்க்கொண்டு வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.