இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 31, 2019 10:19 AM

இன்றைய முக்கியச் செய்திகள் சுருக்கமாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. 

Tamil News Important Headlines - Read here for more oct 31st

1. சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளையொட்டி அகமதாபாத்தில் உள்ள 597 அடி உயர சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

2. கொடைக்கான‌லில் அன்னை தெர‌சா மக‌ளிர் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ தேர்வுகள் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என நிர்வாக‌ம் அறிவித்துள்ளது.

3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கொல்கத்தாவில் காலமானார், அவருக்கு வயது 83. 

4. கோவையில் 2 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். லாரிபேட்டையில் செளருதீன், ஜி.எம்.நகரில் நிஷார் வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளது. 

5. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதே போல் ராமநாதபுரம், குமரி, உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Tags : #NEWS #HEADLINES #TODAY