இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 11, 2019 11:30 AM

இன்றைய முக்கிய செய்திகள் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளது:

Important Tamilnews headlines read here for more details

1. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி மாமல்லபுரம் வந்தார்.

2. மாமல்லபுரத்தில் ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து விளக்கியவாறு சீன அதிபருடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். மாமல்லபுரத்தில் ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இளநீர் பருகினர்.

3. திருத்தணி அருகே மருதவல்லிபுரத்தில் 11 மாத குழந்தை நிஷாந்த் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு.

4. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இயக்குனராக இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே நியமிக்க்ப்பட்டுள்ளார்.

5. இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தியதால் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. முதலீட்டாளர் மாநாடு மூலம் வேலையில் சேர்ந்த ஒருவரை காட்டினால் உங்களை பாராட்டுகிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6. 2019 -ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

7. சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமானது போல உலகத் தலைவர்கள் வந்தால் தமிழகம் சுத்தமாகிவிடும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

8. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி இரட்டைசதம் அடித்து அசத்தினார்.

9. ஆந்திர மாநில பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

10. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Tags : #HEADLINES #MODI_XIJINPING_MEET