இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 30, 2019 10:35 AM
1. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
2. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது அளிக்கப்பட்டுள்ள ஊழல் புகார் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் நடக்கும், பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
4. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, எடப்பாடியின் கையிலா?, மணல் கொள்ளையர்கள் கையிலா?, தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் வந்து விளையாடுவதை உறுதிப்படுத்த அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நேரம் இருக்கிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
6. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வரும் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
7. பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
8. விழுப்புரம் அருகே வேனில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
9. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் சேலம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
10. வயதான பெற்றோரை அவரது பிள்ளைகள் கைவிட்டால், அவர்களுக்கு, 6 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
11. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் கங்குலியை போல் தைரியமாக முடிவுகளை எடுக்கிறார் என முன்னாள் வீரரான ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.