அடுத்த 3 நாட்கள்... கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 12, 2019 12:44 PM

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

heavy rain alert in tamilnadu and puducherry coastal area

அதன்படி வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், சிலப் பகுதிகளில் லேசான மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #RAIN #ALERT #TAMILNADU