ஒண்ணும் ஆகாது, தைரியமா இருங்க .... 'பீதி'யில் உறைந்து போன மக்களுக்கு .... தைரியம் தரும் 'சுகாதாரத்துறை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மற்றும் தாம்பரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இரு புதிய கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் தமிழக சுகாதாரத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து, ரஷ்யா, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'புதிய பரிசோதனை மையம் உருவாக்கும் பணி தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், ஈரான், இத்தாலி உட்பட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்' என்ற தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது வரை யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
