இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'ரசிகர்கள்' இல்லாமல் நடைபெறவுள்ள 'இந்தியா - தென்னாபிரிக்கா' போட்டி ?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 13, 2020 10:35 AM

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்காமல் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

India vs South Afirca matches played without fans in staidum ?

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் ஆட வந்துள்ள நிலையில், முதல் ஒரு நாள் போட்டி நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மீதமுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளை ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் நடத்த வேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. போட்டிகளை கைவிட முடியாத நிலையுள்ளதால் ரசிகர்கள் இல்லாமல் ஆட்டங்களை நடத்த விளையாட்டு துறை அமைச்சகம் அனைத்து விளையாட்டு நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவது குறித்த ஆலோசனை நாளை பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் நடைபெறும். அப்போது இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ள ஒரு நாள் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #BCCI #CORONA VIRUS #IND VS SA