'யோகிபாபு', 'நிரோஷா' ஆகியோருடன் ... 'தமிழக அரசு' வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 12, 2020 08:10 PM

தமிழக அரசு சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

Tamilnadu Govt releases a awareness video for Corona Virus

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. கேரளா, கர்நாடகம், டெல்லி போன்ற மாநிலங்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு சுகாதார துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர்கள் யோகி பாபு, ராம்கி, நடிகை நிரோஷா உட்பட சிலர் இந்த விளம்பர படத்தில் நடித்துள்ளனர். இந்த வீடியோவில் கொரோனா வைரஸ் எப்படி பரவுவது என்பதில் ஆரம்பித்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க எப்படி நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு  முன் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தமிழ்நாட்டில் தற்போது யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONA VIRUS #TAMILNADU GOVT #YOGI BABU