'கையை நல்லா கழுவுங்க' ... 'தேசமே' தேடும் 'கொரோனா' காலர் ட்யூன் குரல் ... சொந்தக்காரர் இவர் தான் !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 12, 2020 01:45 PM

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன் அனைவரது தொலைபேசியிலும் அழைப்பிற்கு முன்னதாக கேட்டு வரும் நிலையில் அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

Voice of Corona caller Tune in all neetwork identifies

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொலைபேசியின் காலர் ட்யூனிகளிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் 38 நொடிகள் வரும் இந்த விழிப்புணர்வு ஆடியோவுக்கு குரல் கொடுத்தவர் யார் என தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஸ்ரீப்ரியாவின் குரல் தான் தற்போது இந்தியா எங்கும்  கேட்கும் கொரோனா காலர் ட்யூனின் குரல் ஆகும். எர்ணாகுளம் காந்தி நகர் பகுதியில் டெலிகிராம் ஸ்டோரில் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசராக ஸ்ரீப்ரியா பணியாற்றி வரும் நிலையில் இதற்கு முன்னதாக கேரளா பிஎஸ்என்எல் சேவையிலும் ஸ்ரீப்ரியா குரல் கொடுத்துள்ளார்.

தற்போது  ஸ்ரீப்ரியாவின் குரல் பி.எஸ்.என்.எல் மட்டுமல்லாது ஜியோ, ஏர்டெல் உட்பட அனைத்து மொபைல் நெட்வொர்க்களிலும் ஒலித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பீதி இந்தியா முழுவதும் உள்ள நிலையில் கொரோனாவின் காலர் ட்யூனும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONA VIRUS #SRIPRIYA #CALLERTUNE