சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு... பரிசு, பாராட்டு பத்திரங்கள், பதக்கங்கள் வழங்கி... கௌரவித்த முதல்வர் பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறு சாதனையாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.

கடந்த 2009–2010 முதல் 2012-2013 வரையிலான சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருது 16 வீரர்கள் மற்றும் 12 வீராங்கனைகள் என 28 நபர்களுக்கும், சிறந்த பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான முதலமைச்சரின் விருது 27 நபர்களுக்கும், என மொத்தம் 55 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 55 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுப்பத்திரம் மற்றும் நினைவுப் பரிசுகளும், சிறந்த நடுவர்களுக்கான விருது பெறும் 5 நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பதக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் நினைவுப் பரிசு ஆகியவைகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஷீலா ஸ்டிபன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், விளையாட்டு வீரர்களுடன் எடுத்தக்கொண்ட புகைப்படத்தை இணைத்து முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
கடந்த 2009-2010 முதல் 2012-2013 வரையிலான சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குநர்கள்/உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் விருதுகளையும், அதற்கான பதக்கங்கள், பாராட்டு பத்திரங்கள், ஊக்கத்தொகைகளையும் வழங்கி கௌரவித்தேன். pic.twitter.com/n8bEJwhw3f
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 9, 2021

மற்ற செய்திகள்
