"நானும் ஒரு விவசாயி... அதனால தான் விவசாயிகள் பயிர்க்கடன ரத்து செஞ்சேன்!".. தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் அதிரடி!.. மக்கள் ஆரவாரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கிக் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல்வர் பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார்.
காலை 9 மணியளவில் போரூரில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திறந்த வேனில் நின்றபடி உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்திற்கு பதிலடி கொடுத்தார்.
"நான் சொல்வதையே முதல்வர் செய்கிறார், என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் செய்வதைத் தான் ஸ்டாலின் சொல்கிறார். கடைசி வரை திமுக சொல்லிக்கொண்டே தான் இருக்கப்போகிறது. செய்யும் இடத்தில் அதிமுக இருக்கப்போகிறது. விவசாயிகள் படும் சிரமங்கள் என்ன? என்பது எனக்கு தெரியும் என்பதால், விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதுதான் அதிமுக அரசு" என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அங்கு இருந்த தொண்டர்களும், பொதுமக்களும் ஆரவாரம் செய்து முதல்வரின் கருத்தை வரவேற்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வருக்கு மாவட்ட அதிமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மற்ற செய்திகள்
