சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள'.. 'அவரது ஆதர்ச வாசகம் இதுதான்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னையில் திறக்கப்பட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் ஜெயலலிதாவின் அபிமானிகள், பொதுமக்கள் பலரும் மெரினாவில் குவிந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் பீனிக்ஸ் பறவை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்துக்கு 2018 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகள் நடந்து வந்த நினைவிடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வுக்காக ஏராளமான மக்கள் மெரினாவில் குவிந்தனர்.
அவரது இந்த நினைவிடத்தில் 'மக்களால் நான்... மக்களுக்காக நான்...' ( "BY THE PEOPLE FOR THE PEOPLE" ) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
