"பொறுத்திருந்து பாருங்கள்!!!" .. 4 ஆண்டுகளுக்கு பிறகு தொண்டர்கள், செய்தியாளர்கள் மத்தியில் சசிகலாவின் பட்டையை கிளப்பும் பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன சசிகலா, பெங்களூரில் இருந்து இன்று சென்னை திரும்பியுள்ளார்.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டர்கள் மத்தியில் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்களிடையே பேசிய சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என்று பேசியதுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றும் பதில் அளித்துள்ளார்.
அத்துடன் மக்களை மிக விரைவில் சந்திப்பேன் என கூறிய சசிகலா, கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். புரட்சித்தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என்று தெரிவித்த சசிகலா தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை என்று அன்புக்கு நான் அடிமை என்ற பாடலை மேற்கொள் காட்டி பேசினார்.
மேலும், அடக்குமுறைக்கு தான் என்றும் அடிபணியமாட்டேன் என்றும் சசிகலா பேசியுள்ளார். இதனிடையே சசிகலாவை சேர்க்கவோ, அதிமுக-அமமுக இணையவோ 100% வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.