'கண்ணுல தண்ணி விட்ட மனுசன்!' .. 'மாநிலங்களவையில் நெகிழவைத்த பிரதமர் மோடி' .. காரணம் இதுதான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பிரதமர் மோடியின் அநேகமான புகைப்படங்களில் அவர் சிரித்துக் கொண்டும், சாதாரணமாக இருப்பதையும் பார்க்க முடியும்.
![PM modi tears while praising congress MP gulamnabi azad heartfelt PM modi tears while praising congress MP gulamnabi azad heartfelt](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/pm-modi-tears-while-praising-congress-mp-gulamnabi-azad-heartfelt.png)
ஆனால் அவர் கண் கலங்கி பேசுவது பொதுவெளியில் அரிதாகவே பார்க்கப்படுகிறது. அப்படி பிரதமர் நரேந்திர மோடி கண்கலங்கி பேசியுள்ள சம்பவம் இந்திய அளவில் வைரல் ஆகி பலரையும் நெகிழவைத்துள்ளது.
அரசியல் சார்ந்த விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு கண்ணீர் சிந்துவதற்கான அவசியம் என்ன என்பது தான் பலருடைய கேள்வி. அப்படியானால் பிரதமர் நரேந்திர மோடி எதைப்பற்றி பேசினார்? எதற்காக கண்கலங்கினார்? என்பதற்கு பின்னால் தான் இருக்கிறது அந்த நெகழ்ச்சி உண்மை.
பிரபல காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத். இவருடைய பதவிக்காலம் தான் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் அவரை வாழ்த்தி பேசிக்கொண்டிருந்த பிரதமர் மோடி அவரைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென கண்ணீர் சிந்து விட்டார். எதிர்கட்சியாக இருந்த போதிலும் குலாம் நபி ஆசாத் பற்றி கூறும்போது தன்னையும் மீறி மோடி கண்ணீர் சிந்திய நெகிழ்வான சம்பவம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
பிரதமரின் உரைக்கு பின்னர் உரையற்றிய குலாம் நபி ஆசாத், தான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)