தமிழக விவசாயிகள் வாங்கிய ‘பயிர்க்கடன்’ தள்ளுபடி.. முதல்வர் பழனிசாமி ‘அதிரடி’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (05.02.2021) முதல்வர் பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் கூறினார்.
இதுதொடர்பாக கூறிய முதல்வர் பழனிசாமி, ‘வேளாண்துறைக்கு அதிமுக அரசு முக்கயத்துவம் அளித்து வருகிறது. பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். கொரோனா, புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த அதிமுக அரசு சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ எனக் கூறினார்.