மதுரையில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோயில்.. திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரமாண்ட கோயிலை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் கிராமத்தில் அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் 12 ஏக்கரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கோயில் கட்டப்பட்டது.
இக்கோயிலில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு 7 அடி உயரம், 400 கிலோ எடையில் ஆளுயர வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலின் கும்பாபிஷகம் மற்றும் திறப்பு விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் 234 தொகுதிகளில் இருந்து தலா ஒருவர் வீதம் அழைத்துவரப்பட்டிருந்த அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு மாலையணித்து பணமுடிப்பு, நினைவுப்பரிசுகள் வழங்கி முதல்வர் கௌரவித்தார்.

மற்ற செய்திகள்
