'எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்த...' 'அண்ணா அவர்களை வணங்குகிறேன்...' - அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் மரியாதை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் இன்று (03-02-2021) வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன். #அறிஞர்அண்ணா pic.twitter.com/t14TvJN1VA
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 3, 2021

மற்ற செய்திகள்
