‘5 நிமிடம் பிரச்சாரத்தை நிறுத்திய முதல்வர்’!.. பின்னணியில் நெகிழ்ச்சி காரணம்.. குவியும் மக்கள் பாராட்டு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரத்தில் இஸ்லாமிய மக்களின் தொழுகைக்காக முதல்வர் பழனிசாமி 5 நிமிடம் பிரச்சாரத்தை நிறுத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (20.01.2021) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா நினைவகத்திற்கு சென்று அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று தொகுப்புகள் அடங்கிய புகைப்படங்களை பார்வையிட்டார்.
பின்னர் காஞ்சிபுரத்தில் முதல்வர் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது முதல்வர் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது, சரியாக ஒரு மணியளவில் இஸ்லாமிய பெருமக்கள் தர்காவில் தொழுகை மேற்கொண்டனர். அதற்காக 5 நிமிடங்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் நிறுத்தினார். பின்னர் தொழுகை முடிந்ததும் பிரச்சாரத்தை தொடர்ந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் முதல்வரை பாராட்டி ஆரவாரம் செய்தனர்.

மற்ற செய்திகள்
