வெளிய வந்த நாளே அதிரடி!.. அந்த ஒரு செயல்... "சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும்"!.. அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு கருத்து!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Jan 31, 2021 11:21 PM

கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையைவிட்டு சசிகலா வெளியே வந்த நிமிடம் முதல் தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

sasikala will be prosecuted for using admk flag minister cv shanmugam

பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று பெங்களூரூ ஜெயிலில் இருந்து வந்த சசிகலா கடந்த 27-ந்தேதி முறைப்படி விடுதலை செய்யப்பட்டார்.

கொரோனா பாதிப்பு இருந்ததால், தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மதியம் 12 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்தார்.

அவர் கார் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பல கார்கள் அணிவகுத்து வந்தன. சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இது குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறுகையில், "அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர். அதிமுக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குறியது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் இது குறித்து பேசிய போது, அதிமுக கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்திய சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sasikala will be prosecuted for using admk flag minister cv shanmugam | Tamil Nadu News.