‘நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...!’ - விடுதலையாகி வெளியே வரும்போதே... அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த சசிகலாவின் ‘அனல் பறக்கும்’ செயல்!!! - விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

4 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து, கடந்த 27ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் சசிகலா. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
10 நாட்களுக்கும் மேலாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் சில நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவருக்கு கொரோனா தொற்று நீங்கி, ரத்தம் அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு சீரானதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து சசிகலாவை டிடிவி தினகரன் அழைத்து வந்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சசிகலா வீல் சேரில் அழைத்துவரப்பட்டார். பின்னர் அதில் இருந்து எழுந்து வந்து காரில் ஏறினார். அந்த காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு தமிழக அளவில் பெரும் கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்
