VIDEO:‘ஓவர் ஸ்பீடில் ஓவர் டேக்!’.. ‘மின்னல் வேகத்தில் சேஸிங்!’.. ‘விடுதலை’ ஆகி தமிழகம் வரும் சசிகலா காரை மறித்த இளைஞரால் ‘பரபரப்பு!’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா பெங்களூருவில் இருந்து இன்று தமிழகம் திரும்பினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து, சசிகலா பெங்களூரு ரிசார்ட்டில் இருந்து இன்று காலை 7:20 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டு, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்தார். அவர் வருகையை அடுத்து தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சென்னையில் 7 இடங்களில் அவரை வரவேற்க அமமுகவினர் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இன்னொருபுறம் சசிகலாவை வரவேற்க கொடி, தோரணம், பேனர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தன. இதனிடையே தடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் அளித்ததுடன் அவர் தமிழக எல்லையை வந்தடைந்தபோது காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றினர்.
ஆனால் கொடி அகற்றப்பட்ட நிலையில் வேறு ஒரு காரிலும் அதிமுக கொடியுடன் தமிழக எல்லையை வந்தடைந்தார் சசிகலா. இந்நிலையில் அவருடைய கார் ஓசூர் ஜூஜூவாடி அருகே பாதுகாப்பு மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தபோது இருச்சக்கர வாகனத்தில் ஓவர்டேக் செய்து துரத்தி வந்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் சசிகலாவின் காரை சேஸ் செய்து வழிமறித்தார்.
அவரை சசிகலாவின் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த இளைஞர் சசிகலாவுடன் செல்ஃபி எடுக்க முயன்றதை அடுத்து, பின்னர் அவரை அழைத்த சசிகலா அவருக்கு தன்னுடன் செல்ஃபி எடுக்க அனுமதி வழங்கினார். இதனை அடுத்து அந்த இளைஞர் சசிகலாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.