'ஜெயலலிதா படம்.. அதிமுக கொடி!'.. சசிகலா பயணித்த காருக்கு சொந்தக்காரர் இவர்தான்! - அடுத்த கணமே தலைமை எடுத்த பரபரப்பு நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி காலை பெங்களூருவில் இருந்து தமிழகம் நோக்கி புறப்பட்டார்.

பெங்களூரில் இருந்து காலை அதிமுக கொடி பொருத்திய காரில் புறப்பட்ட சசிகலா பத்து மணிவாக்கில் தமிழக எல்லை வந்து சேர்ந்தார். தமிழக எல்லைக்கு வந்த சசிகலாவிடம் கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி, அதிமுக கொடி அகற்றப்பட வேண்டும் என்பதற்கான நோட்டீசை வழங்கினார். அத்துடன் சசிகலா காருக்கு பின்னால் 5 கார்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு என்றும் கூறினார்.
பின்னர் காரில் உள்ள கொடியை அகற்றி சிறிது நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது என்றும் தெரிகிறது. ஆனால் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் சசிகலா இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறார். அவருக்கு அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை இருக்கிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் தான் இருக்கிறது. எனவே காரில் கொடி கட்டக்கூடாது என்று இப்போது சொல்ல முடியாது என்று வாதம் செய்தார். காவல்துறையின் தரப்பினரும் கொடியை அகற்றாமல் தமிழக எல்லைக்குள் செல்ல அனுமதி இல்லை என்று உறுதியாக நின்றனர்.
இதனை அடுத்து சசிகலா உடனே வேறொரு காரில் ஏறினார். அந்த காரிலும் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுந்தன. அப்போதுதான் அந்த கார் அதிமுக நிர்வாகியின் கார் என கூறப்பட்டது. இப்படி சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் கூடிய தமது காரை கொடுத்த அந்த அதிமுக நிர்வாகி யார் என்பது தான் பலரது கேள்வியாக இருந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சம்பங்கி தான் சசிகலாவுக்கு தமது காரை நேற்றையதினம் கொடுத்தவர். காரை இயக்கியவர் பிரபு என்பவர். பிரபு தான் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டியவர் என்று கூறப்படுகிறது.
இதனால் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் தட்சிணாமூர்த்தியும், சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் கூடிய காரை கொடுத்த சம்பங்கியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
