'அந்த தாத்தா தான் சாக்கலேட் வாங்கி கொடுப்பாரு'...'அதிர்ந்த மருத்துவர்கள்'...சிறுமிக்கு நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 17, 2019 09:23 AM

சாக்கலேட் வாங்கி கொடுத்து ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் முதியவர் ஒருவர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5th Std girl Sexually Abused by 60 year old man in Madurai

மதுரையை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தாய், தந்தையை இழந்த நிலையில் அவரது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்த்து வந்தார். 5ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியை ஹாஸ்டலில் சேர்ந்து படிக்க வைக்கலாம் என, அந்த சிறுமியின் தாத்தா மற்றும் உறவினர்கள் முடிவு செய்தார்கள். இதையடுத்து ஹாஸ்டலில் சேர்ப்பதற்கு முன்பு அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதை பார்த்து அதிர்ந்து போன மருத்துவர்கள், சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றதாக கூறினர்.

சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்து அதிர்ந்து போன சிறுமியின் உறவினர்கள், அதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார்கள். அப்போது சிறுமி கூறிய தகவல் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ''வழக்கமாக சிறுமி வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அந்த வழியில் இருக்கும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர், அடிக்கடி சிறுமிக்கு சாக்கலேட் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது''

இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அந்த முதியவரை கண்டுபிடித்து அடித்து உதைத்துள்ளார்கள். பொதுமக்கள் தாக்கியதில் ரத்தம் வடிந்த நிலையில், அந்த முதியவர் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் முதியவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர்.

தாய் தந்தையை இழந்த நிலையில் சிறுமிக்கு நடந்துள்ள இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MADURAI #SEXUALABUSE #RAPE #SCHOOLSTUDENT #SEXUALLY ABUSED #MINOR GIRL #OLD MAN