'தொடரும் ஊரடங்கு'... 'கல்லூரித் தேர்வுகள் எப்போது நடக்கும்'?... உயர் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால் இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய, கல்லூரித் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பை மாநில உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான தேர்வுகள் நடத்தப்படுமா, அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது.
இந்தசூழ்நிலையில் இன்று இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், 'நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும். அதாவது ஜூன் மாதத்தில் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட பின்னர் முந்தைய பருவத் தேர்வு நடைபெறும், அதன் பின்னர் அடுத்த கல்வி ஆண்டின் பாட வகுப்புகள் தொடங்கும்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான தேர்வுகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை என தெளிவாக விளக்கமளித்துள்ளது.
